சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், இலங்கையின் முன்னணி ஊடகமான சூரியன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினர்.
விபத்தில் உயிரிழந்த 5 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 29 வயதான தினேஸ் என்ற இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கான இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக , குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சுவிட்சர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் Swiss தமிழ் ஊடகத்தின் ஆழந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறது.







