Swiss News In Tamil

2026 முதல் சூரிக்–மஸ்கட் இடையே ஓமான் ஏர், ஆண்டு முழுவதும் சேவை

2026 முதல் சூரிக்–மஸ்கட் இடையே ஓமான் ஏர் ஆண்டு முழுவதும் சேவை

2026ஆம் ஆண்டு சூரிக்–மஸ்கட் பயணிகளுக்கு ஓமான் ஏர்லைன்ஸ் பெரிய செய்தியை அறிவித்துள்ளது. 2026ம் ஆண்டிலிருந்து ஆண்டு முழுவதும் சேவை இயக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமான் ஏரின் (Oman Air) 2026 கோடைக்கால அட்டவணையின் ஒரு பகுதியாக, மே முதல் செப்டம்பர் வரை வாரத்தில் மூன்று முறை நேரடி விமானங்கள் இயக்கப்படும். இந்தப் பயணங்கள் புதன், வெள்ளி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும். இது தற்போது நவம்பர் முதல் ஏப்ரல் வரை நடைபெறும் குளிர்கால சேவையைத் தொடர்ந்து செயல்படும்; குளிர்காலத்தில் அதிகபட்சம் வாரத்திற்கு ஆறு விமானங்கள் இத்தொடர்பான சேவையில் இயக்கப்படுகின்றன.

Oman Air Zurich Muscat, சூரிக் மஸ்கட் விமான சேவை, ஓமான் ஏர் 2026, சுவிஸ் பயண செய்திகள், மஸ்கட் ஹப் இணைப்புகள்

இந்த புதிய வருடமுழு சேவை சுவிட்சர்லாந்தில் இருந்து ஓமான் செல்லும் பயணிகளுக்கு நேரடியான மற்றும் வசதியான இணைப்பை வழங்கும். அதோடு, ஓமான் ஏரின் மஸ்கட் ஹப் மூலம் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய நகரங்களுக்கு மேலும் விரைந்த பயண இணைப்புகளும் கிடைக்கின்றன.

சூரிக் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் வணிக பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய அட்டவணை பயண வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button