Swiss News In Tamil

Manor கடையின் உடைமாற்றும் அறையில் கேமரா – வாடிக்கையாளர் அதிர்ச்சி.!

Manor (மனோர்) கடையின் உடைமாற்றும் அறையில் கேமரா – வாடிக்கையாளர் அதிர்ச்சி.!

சுவிட்சர்லாந்தின் வேவெய் நகரில் உள்ள மானோர் (Manor) வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிரையல் அறைக்குள் உடை மாற்றிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் வாடிக்கையாளர் தனது மகள் சுட்டிக்காட்டிய கேமராவைக் கண்டதாக கூறியுள்ளார். அந்த நேரத்தில் அவர் உடைகளை கழைந்திருந்ததாகவும், “அந்த சங்கடமான உணர்வை மறக்க முடியவில்லை” எனவும் பகிர்ந்துள்ளார்.

இந்த வாடிக்கையாளர் உடனடியாக கடையின் வாடிக்கையாளர் சேவையையும் காவல்துறையையும் தொடர்பு கொண்டார். அடுத்த நாள் மனோர் நிறுவனம் பதிலளித்ததோடு, பாதுகாப்புத்துறை பொறுப்பாளர் சம்பவம் குறித்து அறியப்பட்டதாகவும், தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

N6b

கடையின் பாதுகாப்பு பொறுப்பாளர், கேமரா டிரையல் அறைக்குள் உள்ள காட்சிகளை மங்கலாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேமரா மீது தற்காலிக மூடுப்பலகைகள் பொருத்தப்பட்டன.

ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தும் அதே இடத்தில் கேமரா நிலைபெற்றிருந்தது. நிறுவனம் இதுகுறித்து அளித்த விளக்கத்தில், அந்த கேமரா 360 டிகிரி படமெடுக்க இயலாத நிலையான கேமரா என்றும், அது முழுக்க பாதையையே நோக்கியதாகவும், அறைகளுக்குள் படம் எடுக்கும் வாய்ப்பு இல்லையெனவும் தெரிவித்தது.

எனினும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை முன்னிட்டு, “கேமரா தெரியும் விதம் சங்கடத்தை ஏற்படுத்தியதால்” அது அகற்றப்பட்டதாக மனோர் நிறுவனம் பின்னர் உறுதி செய்தது. இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் தனியுரிமை மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.

© 20min

Related Articles

Back to top button