Swiss News In Tamil

ஸ்ரேலுக்கான சுவிஸ் தூதரகம் மீளத் திறக்கப்பட்டது

இஸ்ரேலுக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மீளத் திறக்கப்பட்டதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடான மோதல்கள் காரணமாக இஸ்ரேலின் தலைநகர் தெல் அவீவில் இயங்கி வந்த சுவிட்சர்லாந்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தெல்அவிவில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளனர் என தூதுவர் சைமன் கெய்ஸ்‌புலர் அறிவித்தார். கடந்த 12 நாட்களாக கட்டுக்கடங்காத பாதுகாப்புப் பிரச்சினைகளின் மத்தியில், தூதரகக் குழு இரவு-பகலல்லாமல் பணியாற்றியதாக தூதர் குறிப்பிட்டார்.

ஈரானின் தாக்குதல் ஒன்றின்போது சுவிஸ் தூதுவர் கெய்ஸ்‌புலர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஈரானின் டெஹ்ரானிலுள்ள சுவிஸ் தூதரகம் இன்னும் திறக்கப்படவில்லை. தூதரகப் பணிகள் பேர்ன் நகரிலிருந்து மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரேலுக்கான

Related Articles

Back to top button