வெனிசுவேலாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்: சுவிஸ் குடிமக்களுக்கு எச்சரிக்கை
வெனிசுவேலாவுக்கு பயணம் செய்ய வேண்டாம்: சுவிஸ் குடிமக்களுக்கு எச்சரிக்கை
வெனிசுவேலாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது. Swiss Federal Department of Foreign Affairs (FDFA) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பயண அறிவுறுத்தலில், தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகுந்த பதற்றத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
2026 ஜனவரி 3ஆம் தேதி வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு, நாட்டின் முழுப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்பது குறித்து பெரும் நிச்சயமின்மை நிலவுகிறது என wiss Federal Department of Foreign Affairs தெரிவித்துள்ளது. நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதோடு, அது எந்த திசையில் மாறும் என்பது தெளிவாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வன்முறையுடன் கூடிய போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கைது செய்யப்படுவதற்கும், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கும், காவலில் வைக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக Swiss Federal Department of Foreign Affairs குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கைது செய்யப்பட்டால் தூதரக உதவியை உறுதியாக வழங்க முடியாது என்றும் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Venezuela-வில் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் அல்லது பயணம் செய்ய திட்டமிட்டுள்ள சுவிஸ் குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், அவசியமற்ற பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் வெனிசுவேலாவின் நிலைமை குறித்து கவலை அதிகரித்து வரும் சூழலில், சுவிட்சர்லாந்தின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
© KeystoneSDA





