Swiss News In Tamil

ரஷ்யாவால் ஆபத்து.? சுவிஸ் போருக்குத் தயாராக வேண்டும்

ரஷ்யாவால் ஆபத்து.? சுவிஸ் போருக்குத் தயாராக வேண்டும்  சுவிட்சர்லாந்து, போருக்கு தயாராக இருப்பது நல்லது என்று கூறியுள்ளார் சுவிஸ் மாகாண பாதுகாப்புச் செயலர்.

ரஷ்யா உண்மையான அச்சுறுத்தல்தான் என்று கூறியுள்ள சுவிஸ் மாகாண பாதுகாப்புச் செயலரான Markus Mäder, ஆகவே, சுவிட்சர்லாந்து போருக்கு தயாராக இருப்பது நல்லது என்கிறார்.

ukraine russia war GettyImages 1845864196 e1704712482491 resized

பவேரிய தலைநகரான மியூனிக்கில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து தனது பாதுகாப்பு தொடர்பான விடயங்களை வலுப்படுத்தவேண்டும் என்றும், தனது கூட்டாளர்களுடனான ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவேண்டும் என்றும், ஐரோப்பாவில் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதற்கு காரணம் உள்ளது என்றும் கூறிய Markus Mäder, ரஷ்யாவால் ஆபத்து ஏற்படலாம் என்றார்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கு தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button