Swiss News In Tamil

சென்ட் கேலன் நர்சிங் ஹோமில் திருடியதற்காக பெண் கைது

சென்ட் கேலன் நர்சிங் ஹோமில் திருடியதற்காக பெண் கைது

சென்ட் கேலன் நர்சிங் ஹோமில் திருடியதற்காக பெண் கைது.!! சென்ட் கேலனில் உள்ள லாங்காஸ்ஸில் உள்ள முதியோர் இல்லத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் உள்நுழைந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சென்ட்கேலன் நகர காவல்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் 32 வயதான சுவிஸ் பெண் ஒருவர் கட்டிடத்திற்குள் பின்கதவு வழியாக திருட்டுதனமாக நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ட் கேலன்

உள்ளே நுழைந்ததும்இ பல்வேறு அறைகள் மற்றும் சேமிப்புப் பகுதிகளைத் தேடிஇ பல நூறு பிராங்குகள் பணத்தைத் திருடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபரை அந்த இடத்திலேயே போலீசார் கைது செய்ய முடிந்தது. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுஇ சென்ட் கேலன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button