Swiss News In Tamil

லண்டனுக்கான விமான பயணங்களை ரத்து செய்த சுவிஸ் எயார்

லண்டனுக்கான விமான பயணங்களை ரத்து செய்த சுவிஸ் எயார்

சுவிட்சர்லாந்திலிருந்து ஜெனீவா மற்றும் சூரிச் நகரங்களில் இருந்து ஹீத்ரோவுக்கு செல்லவிருந்த அனைத்து விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சுவிஸ் சர்வதேச விமான சேவை (SWISS) நிறுவனம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீவிபத்தால் இவ்வாறு விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெனீவாவில் இருந்து புறப்படவிருந்த 10 சுவிஸ் விமானங்கள் (944 பயணிகள்) மற்றும் சூரிச்சில் இருந்து புறப்படவிருந்த 14 விமானங்கள் (1,969 பயணிகள்) ரத்து செய்யப்பட்டதாக லுஃப்தான்சா குழுமம் தெரிவித்துள்ளது.

“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை, சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஹீத்ரோவுக்கு இடையிலான அனைத்து விமானங்களின் டிக்கெட் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது,” எனவும் SWISS அறிவித்துள்ளது.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை நிர்வகிக்கும் Heathrow Airport Holdings நிறுவனம், இந்த தீவிபத்தால் அடுத்த சில நாட்களுக்கு கடுமையான போக்குவரத்து சிரமங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.

சுவிஸ் விமானம்

உலகளவில் ஐந்தாவது பெரிய விமான நிலையமான ஹீத்ரோ, தினசரி 230,000 பயணிகளை ஏற்றிவிடும் திறன் கொண்டது. 80 நாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி, 1,300 விமானங்கள் தினசரி ஹீத்ரோவில் இருந்து புறப்படும்.

இந்த தீவிபத்தால், லண்டன் காட்விக் விமான நிலையம் தற்சமயம் பிற விமானங்களை திசைதிருப்பி ஏற்க தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை, ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து காரணமாக, விமான நிலையத்தின் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பல விமான பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், லண்டன் மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்தால், ஹீத்ரோவின் மின்சார ஆதாரமும், இதற்கான காப்பு மின்விநியோக அமைப்பும் முடங்கியது.

தீவிபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button