Swiss News In Tamil

பேரிடர் எச்சரிக்கையில் சுவிஸ் பின்னடைவு! 2029 வரை காத்திருக்க வேண்டிய நிலை!

பேரிடர் எச்சரிக்கையில் சுவிஸ் பின்னடைவு! 2029 வரை காத்திருக்க வேண்டிய நிலை!

பேரிடர் எச்சரிக்கையில் சுவிஸ் பின்னடைவு! 2029 வரை காத்திருக்க வேண்டிய நிலை!

பேரிடர் காலங்களில் மக்களின் உயிரைக் காக்க உதவும் மொபைல் அவசர எச்சரிக்கை தொழில்நுட்பத்தில், சுவிட்சர்லாந்து இன்னும் பல ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ, வெள்ளம் அல்லது பிற பேரிடர்கள் ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நேரடியாக அவசர புஷ் அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன. ஆனால், சுவிட்சர்லாந்தில் தற்போது அந்த வசதி இல்லை.

தற்போது சுவிஸில் அவசரநிலை ஏற்பட்டால் சைரன்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதன் பின்னர் மேலதிக தகவல்களைப் பெற மக்கள் Alertswiss செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியிருக்க வேண்டும். தற்போது இந்த செயலி சுமார் 25 லட்சம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 28 சதவீதம் பேருக்கே இந்த வசதி சென்றடைந்துள்ளது.

6a 1

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக Cell Broadcast என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பேரிடர் ஏற்படும் பகுதியில் உள்ள அனைத்து மொபைல் போன்களுக்கும், சுவிஸ் சிம் இல்லாவிட்டாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சாதனங்களுக்குக் கூட நேரடியாக அவசர எச்சரிக்கை அனுப்ப முடியும்.

எனினும், மொபைல் போன் அணைக்கப்பட்டிருந்தாலோ, நெட்வொர்க் இணைப்பு இல்லாவிட்டாலோ அல்லது பேட்டரி காலியாக இருந்தாலோ அந்த எச்சரிக்கை கிடைக்காது.

இந்தத் திட்டத்திற்காக சுமார் 15.8 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் முதலீடு செய்யப்படவுள்ளது. ஆண்டுதோறும் 7 மில்லியன் பிராங்குகள் பராமரிப்பு செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் இந்த புதிய அவசர மொபைல் எச்சரிக்கை அமைப்பு 2029ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button