சொலுத்தூர்ன் கன்டோனில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை
சொலுத்தூர்ன் கன்டோனில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை

சொலுத்தூர்ன் கன்டோனில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை
சொலுத்தூர்ன் கன்டோனின் எர்லின்ஸ்பாக் (Erlinsbach) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடை உரிமையாளர் ஒருவர் நான்கு பெண்களால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kantonspolizei Solothurn தெரிவித்த தகவலின்படி, 2026 மே 24 ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில், ஆராவர்ஷ்ட்ராசே (Aarauerstrasse) பகுதியில் உள்ள கடைக்குள் நுழைந்த நான்கு அடையாளம் தெரியாத பெண்கள், கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர், அவர்கள் கடையில் இருந்த பொருட்களுடன் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துக்குப் பின்னர் குற்றச்செயலில் ஈடுபட்ட பெண்கள் கிராமச் சந்தை பகுதி (Dorfplatz) நோக்கி நடந்து தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் கடை உரிமையாளர் லேசான காயங்களுக்கு உள்ளாகியதுடன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், குறித்த நான்கு பெண்களும் சம்பவத்துக்கு முந்தைய நாளிலேயே பலமுறை அந்தக் கடைக்கு வந்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சொலுத்தூர்ன் கன்டோனல் போலீசாரும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகமும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. சம்பவத்தை பார்த்தவர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் தெரிந்தவர்கள் 032 627 81 17 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© Kapo SO





