Swiss News In Tamil

உறைபனி மழையால் ஃப்ரீபர்க் மாகாணத்தில் 30 விபத்துகள்

உறைபனி மழையால் ஃப்ரீபர்க் மாகாணத்தில் 30 விபத்துகள்.!!! Fribourg மாகாணத்தில்  ஒரே இரவில் மோசமான வானிலை காரணமாக, 11 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 3 பேர் லேசான காயமடைந்தனர், சுமார் 30 வாகனங்கள் பனியில் சிக்கின. இரண்டு சாலைகள் மூட வேண்டியிருந்தது என Fribourg மாகாண போலீசார் அறிவித்துள்ளனர்.

ஜனவரி 4, 2025, சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு தொடங்கி, Fribourg காவல்துறை அவசரநிலை மையத்திற்கு வானிலை, குறிப்பாக உறைபனி மழை பற்றி எண்ணற்ற அழைப்புகள் வந்தன.  இந்த அறிக்கைகள் முக்கியமாக Vivisbach (விவிஸ்பாக்), Glane (க்ளேன்), Greyerz(க்ரூயர்), Saane(சானே) மற்றும் Sense (சென்ஸ்) மாவட்டங்களில் இருந்து வந்தன. 

Vuisternens-devant-Romont (விஸ்டர்னென்ஸ்-டெவன்ட்-ரொமான்ட்) மற்றும் Epagny(எபாக்னி) ஆகிய இடங்களில், சுமார் பத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொடர் விபத்துக்களால் சாலைகள் இரண்டு மணி நேரம் மூடப்பட்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உறைபனி மழையால்

Giviez (கிவீஸ்) இல், பத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் நிகழ்ந்தன. அவற்றில் 3 பேர் லேசான காயமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மொத்தம் 11 விபத்துகளில் சுமார் 30 வாகனங்கள் சிக்கின. விபத்து நடந்த இடங்களுக்கு பல போலீஸ் ரோந்துகள் அனுப்பப்பட்டன, பொதுப்பணித் துறை (TBA) மற்றும் இன்டர்காண்டோனல் நெடுஞ்சாலை பராமரிப்பு சேவை (SIERA) ஆகியவற்றுடன் இணைந்து சாலைகளை சுத்தம் செய்வதற்கும் சரிசெய்வதற்கும் பணிபுரிந்தனர். நள்ளிரவு 2:00 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

காலநிலைக்கு ஏற்றவாறு சாரதிகள் வேகத்தை சரி செய்யாத காரணத்தினால் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கவனமாக ஓட்டவும் வேகத்தை குறைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

© Kantonspolizei Freiburg

Related Articles

Back to top button