Saturday, 19 September 2026
Swiss News In Tamil

சுவிஸ் புலம்பெயர் எதிர்ப்புக் கட்சிக்கு சாதகமான ஆய்வு முடிவுகள்

சுவிஸ் புலம்பெயர் எதிர்ப்புக் கட்சிக்கு சாதகமான ஆய்வு முடிவுகள்..!! சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் எதிர்ப்புக் கட்சி ஒன்றிற்கு ஆதரவு பெருகிவருகிறது.

கடந்த மாதம் நாட்டில் தேர்தல் நடந்திருக்குமானால், வலதுசாரி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

சுவிஸ்

அந்த அளவுக்கு சுவிஸ் மக்கள் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது. சுவிஸ் தேர்தல் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், கடந்த மாதம் நாட்டில் தேர்தல் நடந்திருக்குமானால், சுவிஸ் மக்கள் கட்சிக்கு 29.9 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் என தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 2 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.