Swiss News In Tamil

சோலுத்தூர்ன்னில் ரத்தக்களரி : 15 வயது சிறுவனை சுட்ட இளைஞன்

15 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்

சோலுத்தூர்ன்னில் ரத்தக்களரி : 15 வயது சிறுவனை சுட்ட இளைஞன்

சுவிட்சர்லாந்தின் Kappel (கப்பல்) என்ற இடத்தில் சனிக்கிழமை மாலை இரண்டு இளைஞர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் முடிவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இளைஞனை சுட்டதாக சந்தேகிக்கப்படும் சக இளைஞரை சோலோதர்ன் கன்டோனல் போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர், ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள நகரமான Hägendorf (கேகன்டோர்ப்) இல் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பற்றி போலீசார் மேலும் கூறுகையில், இரண்டு வாலிபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

ரத்தக்களரி

சனிக்கிழமை மாலை, சொலுத்தூர்ன் கன்டோன் கப்பலில் காயமடைந்த நபர் தரையில் கிடந்ததைக் கண்டபோது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவசர சேவைகள் விரைந்து வந்து, முதலுதவி அளித்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Related Articles

Back to top button