சூரிச்சில் மூவரை கடித்துக்குதறிய நாய் : போலீசாரையும் பதம் பார்த்தது.!! திங்கள்கிழமை மாலை சூரிச்சின் Regensdorf அருகே உள்ள அட்லிகோனில், நாய் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் மோசமாக காயமடைந்தனர். இரவு 7 மணிக்கு முன்பு, குடியிருப்பில் இருந்து தப்பிய ஒரு நாய் கட்டிடத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை தாக்கியது. அதில் 5 வயது சிறுவன் மற்றும் 7 வயது சிறுமிக்கு கை மற்றும் கால்களில் பலத்த கடிகாயங்கள் ஏற்பட்டது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பெரியவர்கள் ஓடி வந்து காவல் துறையை அழைத்தனர். நாயை தடுக்க முற்பட்ட 40 வயதுடைய பெண் ஒருவரையும் நாய் பலமாக கடித்தது. குறித்த 33 வயதுடைய பெண் உட்பட குழந்தைகளுக்கு சம்பவ இடத்திலையே சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது மாத்திரம் இன்றி நாயை பிடிக்கும் முயற்சியில் ஒரு பெண் போலீசாரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் குடியிருப்புக்கு திரும்பிய நாய் பிடிக்கப்பட்டு உரிமையாளரின் அனுமதியோடு கால்நடை மருத்துவரால் மயக்க ஊசி போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Nau.ch