Swiss News In Tamil

கிராவுன்டனில் வீடு தீக்கிரை மூவர் பாதிப்பு : ஒருவர் கைது.!

கிராவுன்டனில் வீடு தீக்கிரை மூவர் பாதிப்பு : ஒருவர் கைது.!

கிராவுன்டனில் வீடு தீக்கிரை மூவர் பாதிப்பு : ஒருவர் கைது.! வியாழன் மாலை கன்டோன் கிராவுண்டனில்  உள்ள Chur எனுமிடத்தில் வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த தீவிபத்து நேற்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்டது. இதன்போது வீட்டிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வீட்டிற்கு தீ வைத்ததாக குறிப்பிடப்படும் சந்தேக நபர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கிராவுன்டனில்

வீட்டின் முகப்புப் பகுதியில் எஞ்சியிருந்த வீட்டுப் பொருட்களை வேண்டுமென்றே எரித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன .

இந்நிலையில், 40 வயதான சுவிஸ் நபரை கைது செய்ய Graubunden அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் Graubunden கன்டோனல் போலீசார் நியமிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று பேரும் அன்று மாலையே  சிகிச்சை பெற்று வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kantonspolizei Graubünden

Related Articles

Back to top button