Swiss News In Tamil

ஆர்காவ் மருத்துவமனையில் நோயாளிக்கு பரிமாறிய உணவில் பூஞ்சை

ஆர்காவ் மருத்துவமனையில் நோயாளிக்கு பரிமாறிய உணவில் பூஞ்சை

ஆர்காவ் மருத்துவமனையில் நோயாளிக்கு பரிமாறிய உணவில் பூஞ்சை சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் கன்டோன் பாடனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் தனது காலை உணவில் பழுதடைந்த உணவை தந்ததாக முறைப்பாடு செய்துள்ளார். அவரது தட்டில் இரண்டு முனைகளிலும் பூஞ்சை பிடித்த அப்பென்செல்லர் சீஸ் வழங்கப்பட்டதாக அவர் புகார் தெரிவிக்கிறார்.

பீட்டர் ரோத் என்ற நோயாளி, சீஸ் உற்பத்தியாளரான எம்மியைத் தொடர்பு கொண்டு, ‘இதுதான் சுவிஸ் தரமா?’ என கேட்டுள்ளார். இதற்கு எம்மி நிறுவனத்தினர் அதே நாளில் அவரை தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எம்மி சீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சிமோன் பர்கெனரின் கூற்றுப்படி, இது பேக்கேஜிங்கில் உள்ள ஒரு சிறிய துளையால் ஒட்சிசன் உட்புகுந்தமையால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என தெரிவித்தார்.

ஆர்காவ்
(c) badenertagblatt

காற்று புகாத பக்கிங் மற்றும் வெளிநாட்டுப் பொருட்களுக்கான வழக்கமான சோதனைகள் இருந்தபோதிலும்இ, இதுபோன்ற சிக்கல்கள் சில நேரம் ஏற்பட்டுவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனையும் தவறுக்கு மன்னிப்பு கேட்டது. குறித்த நோயாளிக்கு பேக் செய்யப்பட்ட ஒளிபுகா பேக்கேஜில் உள்ள சீஸ் பரிமாறப்பட்டதாகவும், அது காலாவதி தேதியைக் கடக்கவில்லை என்றும், அதனால் இவ்வாறு ஏற்படும் என தாம் நினைத்திருக்கவில்லை எனவும் விளக்கினார்.

1f4f21bc 0463 434f ac93 d5bcc02be4e2

சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் பொதுவாக அதன் உணவுக்காக அதிக பாராட்டுகளைப் பெறுகிறது மற்றும் அதன் தரத்தை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலைமையைச் சரிசெய்ய, மருத்துவமனையின் தலைமை சமையல்காரர் புகாரளித்த நோயாளியை நேரில் சென்று அவருக்கு ஒரு பழக்கூடை அன்பளிப்பாக வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button