சுவிட்சர்லாந்தில் மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருவதாக ஆய்வில் தகவல்
சுவிட்சர்லாந்தில் மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து வருவதாக ஆய்வில் தகவல்
சுவிட்சர்லாந்தில் மக்கள் மதத்துடன் இணைந்திருக்கும் நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தேவாலயங்களில் நடைபெறும் மதச்சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை பெரிதும் சுருங்கிவிட்டதாகவும், சமீபத்திய அரசு கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Federal Statistical Office (FSO) இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, தற்போதைய சந்ததியில் மத நம்பிக்கை மற்றும் அதன் செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பைவிட இன்று மக்கள் மதச்சடங்குகளில் பங்கேற்பது மிகவும் குறைவாக உள்ளது. தேவாலய சேவைகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் சிறிது சிறிதாக மங்கிவருகிறது.

மதத்தைச் சேர்ந்ததாக சொல்வோரும், இறைவனை நம்புகிறோமா எனக் கேட்கப்படும் போது, அதற்கான உறுதியான பதிலை வழங்காமல், சந்தேகத்துடன் பதிலளிக்கும் நிலை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு மதத்துடன் பெயரளவில் தொடர்பில் இருப்பினும், உண்மையான நம்பிக்கை மற்றும் செயல்பாடுகள் குறைவடைந்துள்ளன.
இருப்பினும், ஒரு விசேஷமான தருணங்களில் – குறிப்பாக தனிப்பட்ட துன்பங்கள், சோதனைகள், மற்றும் நெருக்கடிக் காலங்களில், மக்களிடம் மதம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் மீண்டும் உருவாகும் நிலை காணப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் இந்த மாறும் மதநிலைமை, சமூக ஒழுக்கம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் புதிய தலைமுறையின் வாழ்கை முறைகள் ஆகியவற்றின் தாக்கங்களால் உருவாகி இருக்கக்கூடும் என மதிப்பீடு செய்யப்படுகிறது.






