Swiss News In Tamil

8 வார விடுமுறை வேண்டும் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்கள் கோரிக்கை

8 வார விடுமுறை வேண்டும் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்கள் கோரிக்கை

சுவிட்சர்லாந்தில் தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைச்சுமையை குறைத்து, படிப்பை விட்டு விலகுவதைத் தடுக்கும் நோக்கில் 176,447 கையொப்பங்கள் வெறும் இரண்டு மாதங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த கடிதம் கூட்டாட்சிப் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சமமற்ற விடுமுறை – மாணவர்கள் vs. பயிற்சியாளர்கள்

கடிதத்தில் குறிப்பிடப்படுவதாவது: சாதாரண மாணவர்கள் ஆண்டுக்கு 13 வார விடுமுறை பெறுகிறார்கள், ஆனால் பயிற்சியாளர்கள் (apprentices) வெறும் 5 வாரம் மட்டுமே விடுமுறை பெறுகிறார்கள். இது வெளிப்படையான சமமற்ற நிலை என விமர்சிக்கப்பட்டுள்ளது.

a232149f4058a914c5ea1b7ecbd15eac9dd46aa4 89872643

அதிக வேலைச்சுமை – மனநலம் பாதிப்பு

பயிற்சியாளர்கள் அதிக வேலைச்சுமை காரணமாக சிரமப்படுவதாகவும், ஒரு ஆய்வின்படி, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் மனநலக் குறைபாடுகள் அனுபவிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், நான்கில் ஒரு பகுதி மாணவர்கள் தங்களின் தொழிற்பயிற்சியை முற்றிலும் கைவிடுகின்றனர். நீண்ட நேரப்பணி, போதிய விடுமுறை இல்லாமை, போதுமான ஆதரவு இல்லாமை ஆகியவை அதிகம் விமர்சிக்கப்பட்ட காரணங்களாகும்.

மேலும் விடுமுறை வாரங்கள் – அனைவருக்கும் நன்மை

கையொப்ப இயக்கத்தை முன்னெடுத்த கூட்டணி இதுபற்றி தெரிவிக்கையில்,
“பயிற்சியாளர்களுக்கான விடுமுறை வாரங்களை அதிகரிப்பது மற்றும் தொழிற்பயிற்சியின் தரத்தை மேம்படுத்தும், இறுதியில் இதன் பலன் மாணவர்களுக்கும், நிறுவனங்களுக்கும், சமூகம் முழுவதுக்கும் கிடைக்கும்.” என தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button