Swiss News In Tamil

பாசல் பகுதியில் கடையில் புகுந்து கத்தியை காட்டி பணம் கொள்ளை

கன்டோன் பாசல் லீஸ்டல் பகுதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று வியாழன் மாலை, இரவு 8 மணிக்குப்பின்னராக இடம்பெற்றுள்ளதாக பாசல் கன்டோனல் போலீசார் அறிவித்துள்ளனர்.

குறித்த கடைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செக்அவுட் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு நின்ற இரண்டு காசாளர்களை கத்தியால் குத்தும் ஆயுதத்தை காட்டி மிரட்டிஇ பணத்தை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

பின்னர் குற்றவாளி தான் கொள்ளையடித்த பல நூறு பிராங்குகள் பணத்துடன் பிரதான நுழைவாயில் வழியாக குற்றம் நடந்த இடத்தை விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமரா மூலம் குற்றவாளி ஒரு ஆண் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கருப்பு ஜாக்கெட் அணிந்து கருமையான கால்சட்டை உடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்புடன் ஜெர்மன் மொழி பேசியதா தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் பாசல் கன்டோனல் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, அவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கும் படியும் பொதுமக்களை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: Basel-Landschaft Police

Related Articles

Back to top button