Swiss Information

நியாயமான வணிகப் பொருட்கள் வாங்குவதில் உலகில் முதலிடத்தை தக்கவைத்த சுவிட்சர்லாந்து

நியாயமான வணிகப் பொருட்கள் வாங்குவதில் உலகில் முதலிடத்தை தக்கவைத்த சுவிட்சர்லாந்து

நியாயமான வணிகப் பொருட்கள் வாங்குவதில் உலகில் முதலிடத்தை தக்கவைத்த சுவிட்சர்லாந்து

நியாயமான விலையிலும் சமூக பொறுப்புடனும் விற்பனை செய்யப்படும் “ஃபெயர்ட்ரேட்” (Fairtrade) பொருட்களை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்து மீண்டும் உலகின் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அந்நாட்டில் சூப்பர்மார்க்கெட்டுகள் கடுமையான விலைப்போட்டியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் சான்றளிக்கப்பட்ட Fairtrade பொருட்களின் விற்பனை 6.3 சதவீதம் அதிகரித்து 1.08 பில்லியன் சுவிஸ் பிராங்குகளை எட்டியுள்ளது. இதன்படி நாட்டில் ஒருவரின் சராசரி Fairtrade செலவு 119 பிராங்குகளாக உயர்ந்துள்ளது.

அதே காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தின் மொத்த மளிகைப் பொருள் விற்பனை வளர்ச்சி வெறும் 2.5 சதவீதமாக இருந்தபோதிலும், Fairtrade பொருட்களுக்கு மக்கள் அதிக ஆதரவு வழங்கியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள கடைகளில் 3,600-க்கும் அதிகமான Fairtrade பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காப்பி, சாக்லேட், வாழைப்பழம், மலர்கள், பருத்தி ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன.

N4 2

வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் பாதுகாப்பான வேலை சூழலை உறுதி செய்வதே Fairtrade திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த உற்பத்திக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இந்த துறையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முன்னணியில் இருப்பதன் மூலம், சமூக பொறுப்பு மிக்க நுகர்வு பழக்கம் அந்நாட்டு மக்களிடையே அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இதன் மூலம் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளையும் சுவிட்சர்லாந்து பின்னுக்குத் தள்ளியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button