Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பதின்ம வயது தீவிரவாதிகள் மூவர் கைது..!!

சுவிட்சர்லாந்தில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சிறுவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் சூரிச்சில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய 15 வயது இளைஞன் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இளம் வயதிலேயே இத்தகைய இளைஞன் எப்படி தீவிரவாதியாக மாற முடியும் என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பியது.

சுவிட்சர்லாந்தில்

மேலும், வாட் மாகாணத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை 15 வயது ரஷ்ய நாட்டைச்சேர்ந்த இளைஞன் ‘தீவிரவாத அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிட்டு’ கைது செய்யப்பட்டிருந்தார்.

இதுமாத்திரமின்றி ஜெனீவாவிலும் ‘தீவிரவாத செயற்பாடுகள் பரப்பப்படும் சமூக வலைப்பின்னலில் செயற்பாட்டில் இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பதின்ம வயதினரை போலீசார் கைது செய்திருந்தனர்.

இச்சம்பவங்கள் சுவிட்சர்லாந்து வாழ் மக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button