Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவருக்கு சிறை.!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவருக்கு சிறை.!

ருமேனியத்தை சேர்ந்த 36 வயது நபர், சுவிட்சர்லாந்தில் பல இளம்பெண்களை விபச்சாரம் செய்யவைத்து, பணத்தை சுரண்டிய வழக்கில், வலைஸ் கன்டோன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர்மீது விபச்சாரம் ஊக்குவித்தல், பணமோசடி மற்றும் வற்புறுத்தல் முயற்சி ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

2023-ம் ஆண்டு முதல், உறவுப் பிணைப்பைத் தவறாக பயன்படுத்தி, “அதிகமாக சம்பாதிக்கலாம்” என்ற பெயரில் பல இளம்பெண்களை ருமேனியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளியதாகக் கூறப்படுகிறது. தனது காதலியின் மூலமாக, அவர் இல்லாத நேரங்களிலும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன.

swisstamil prostituzione

பெண்களை மிரட்டியதோடு, சிலரை தாக்கியதும், கத்தியை காட்டி பயமுறுத்தியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சம்பாதித்த பணம், குற்றவாளியின் உறவினர்களின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர், ஏப்ரல் 2024ல் போலீசை அணுகியதையடுத்து, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

முதற்கட்டமாக, 46 மாதங்கள் சிறை மற்றும் 10 ஆண்டுகள் நாடுகடத்தல் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் குற்றவாளி, “நான் செய்தது தவறு, அதற்காக வருந்துகிறேன். சுவிட்சர்லாந்தில் வேலை தேடி வாழ விரும்புகிறேன்” என கூறி தண்டனையை குறைக்க கோரியுள்ளார். அவரது வழக்கறிஞர், தண்டனையை அதிகபட்சம் 18 மாதங்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்றும், நாடு வெளியேற்றம் 5 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Articles

Back to top button