Swiss News In Tamil

இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து சுவிட்சர்லாந்து கவலை

இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து சுவிட்சர்லாந்து கவலை

மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து கடுமையாகும் பதற்ற நிலைமை குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான நிலைமை, குறிப்பாக ஜூன் 13 ஆம் தேதி முதல் உருவாகி வரும் மோதல்கள் மற்றும் அதன் பின்னணியில் அமெரிக்காவின் தாக்குதல்கள் போன்றவை, மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இது சுவிட்சர்லாந்துக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரும் சிறந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, மேலும் மோசமான மோதல்களிலிருந்து தவிர்க்க வேண்டும் என்றும், நிலையை சாந்தப்படுத்த இராஜதந்திர வழிகளை உடனடியாக நாட வேண்டும் என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான்

மேலும், பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும், உரிய அரசியல் கலந்துரையாடல்கள் மூலமாகத்தான் நிலையான சமாதானம் ஏற்பட முடியும் என்பதையும் சுவிட்சர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button