Swiss News In Tamil

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுவிட்சர்லாந்திற்கு வருகை

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சுவிட்சர்லாந்திற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ்–க்ளோஸ்டர்ஸ் நகரில் 23ம் திகதி வரை நடைபெறவுள்ள 56வது உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

2026 ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார மன்ற மாநாடு உரையாடலின் உயிர்ப்பு என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற உள்ளது.

n4 7

இம் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசுத் தலைவர்கள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மூத்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உயர் மட்ட இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button