Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மின்சார பயன்பாடு மோசடி குறித்து எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் ஒன்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார பயன்பாட்டை வரையறுக்கும் வகையிலான கருவி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இணைய வழியில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கருவியை பயன்படுத்தினால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில், மின்சார பயன்பாடு, மோசடி, எச்சரிக்கை

எனினும் இந்த விளம்பரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியை பயன்படுத்தி மின்சார செலவினை குறைத்துக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உங்களது மின் கட்டணங்களை 90% குறைக்கும் என்ற அடிப்படையில் விளம்பரம் செய்யப்பட்டாலும் உண்மையில் வீட்டு உபகரணங்களை பயன்படுத்தும் போது இந்த கருவியின் ஊடாக நன்மை கிடைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த கருவியை கொள்வனவு செய்த பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button