Swiss News In Tamil

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் படையினர் காசாவில் அமைந்துள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா மருத்துவமனை, சுவிட்சர்லாந்து கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பில் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து வலியுறுத்தி உள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சுவிட்சர்லாந்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மீறப்படக்கூடாது என தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தாக்குதலை தான் நடத்தவில்லை எனவும் பலஸ்தீனஜிஹாதிய அமைப்பு நடத்தியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://youtu.be/187JU3pYHl8

Related Articles

Back to top button