Swiss News In Tamil

சுவிஸில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடய 3 கைது

சுவிஸில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடய 3 கைது – பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான பணம் மீட்கப்பட்டுள்ளது.

ரொமானியாவை சேர்ந்த 23, 24 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோளப் பயிர்ச் செய்கைத் தோட்டமொன்றின் மத்தியில் கூடாரம் ஒன்றை அமைத்து இந்த சந்தேக நபர்கள் மறைந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது

சுவிஸில், கொள்ளைச் சம்பவங்களுடன், சுவிஸ் பிராங்குகள்

சூரிச்சின் Unterohringen பகுதியில் இந்த நபர்கள் மறைந்திருந்தனர் எனபோலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 19ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் பல்வேறு இடங்களில் இந்த நபர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலத்திரனியல் சாதனங்கள் பெறுமிதிமிக்க பொருட்கள் மற்றும் ஒரு லட்சம் சுவிஸ் பிராங்குகள் பணம் உள்ளிட்ட பொருட்களை இந்த சந்தேக நபர்களிடமிருந்து மீட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Source:- Tamilinfo

Related Articles

Back to top button