சுவிஸ் Chur கன்டோன் Heftiger பகுதியில் மின்கம்பத்துடன் கார் மோதி பயங்கர விபத்து

சுவிஸ் Chur கன்டோன் Heftiger பகுதியில் மின்கம்பத்துடன் கார் மோதி பயங்கர விபத்து Chur – Heftiger பகுதியில் கார் ஒன்று வீதியில் இருந்த மின் கம்பத்துடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை (ஜனவரி 25, 2023) காலை 11:25 மணிக்கு Emserstrasse இல் குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஓட்டுனர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

59 வயதான ஓட்டுநர் ஒருவர் தனது காரை Emserstrasse வழியாக Chur திசையில் ஓட்டினார். 30 ஆம் இலக்க இல்லத்தில் உள்ள ரவுண்டானாவிற்கு சற்று முன்னர், சாரதி வாகனத்துடன் நடுரோட்டில் வந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளார்.

பலத்த காயமடைந்த டிரைவரை அருகில் உள்ளவர்கள் அவதானித்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவசர போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வரவழைக்கப்பட்டு உடனடியாக விபத்தில் சிக்கியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குறித்த விபத்தின் காரணமாக Emserstrasse இரண்டு மணி நேரம் இருபுறமும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.





