Swiss News In Tamil

முட்டை விலை அதிகமாக உள்ள நாடுகளில் சுவிஸ் – அதிர்ச்சி ஆய்வு

முட்டை விலை அதிகமாக உள்ள நாடுகளில் சுவிஸ் – அதிர்ச்சி ஆய்வு உலகில் முட்டைகளின் விலைகள் மிகவும் அதிகமாக காணப்படும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தை வகிக்கின்றது. சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சுமார் 91 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில் சுவிட்சர்லாந்தில் முட்டை விலை மிக உயர்வு என்பது தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் 12 முட்டைகள் 6.18 சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுவிட்சர்லாந்தில் முட்டை விலைகள் குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது முட்டைக்கான கொள்வனவு இயலுமை சாதாரண அளவில் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முட்டைகளின் விலைகள், முட்டை விலை , சுவிஸ், அதிர்ச்சி ஆய்வு, சுவிட்சர்லாந்து

கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது முட்டை விலை சுவிட்சர்லாந்தில் 14 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

ஒலி வடிவில் செய்தியினை கேட்க

Related Articles

Back to top button