Swiss News In Tamil

சுவிற்சர்லாந்தில் ஒரு வருடமாக போலீசாருக்கு தண்ணிகாட்டிய சாரதி..!!

சுவிற்சர்லாந்தில் போக்குவரத்து விதிமுறைகள் என்பது கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு விடயமாகும். ஆனால் பாசல் (Basel) நகரில் ஒரு ஓட்டுனர் செய்த காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சாரதியொருவர் அனுமதிப்பத்திரமின்றி ஓராண்டு காலம் பஸ் ஒன்றை செலுத்தியுள்யுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இவ்வாறு பஸ் செலுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில், போக்குவரத்து விதிமுறைகள், பாசல் (Basel), swiss Bus, Swiss Driver
சுவிற்சர்லாந்தில் ஒரு வருடமாக போலீசாருக்கு தண்ணிகாட்டிய சாரதி..!!

கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் போக்குவரத்து விதி மீறல் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு வாகனம் செலுத்தியுள்ளார்.

வாகன அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த நபர் எவ்வாறு ஓராண்டு காலம் பஸ் செலுத்தினார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த சாரதிக்கு 13 மாத கால சிறைத்தண்டனையும், சுமார் 6500 சுவிஸ் பிரஙர்குகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button