Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் நான்கு மாநிலங்களில் இருந்து தமிழ்மக்கள் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் நான்கு மாநிலங்களில் இருந்து தமிழ்மக்கள் சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் நான்கு மாநிலங்களில் இருந்து தமிழ்மக்கள் சந்திப்பு அண்மையில் லுட்சேர்ன், ஒப்வாள்டன். நிட்வாள்டன் மற்றும் ஊரி மாநில தமிழ் மக்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் தமிழ்தேசியத்தின்பால் பல்வேறு சர்ச்சைகள் நிலவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அதற்கான ஒரு தெளிவூட்டல் கலந்துரையாடலாக குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

WhatsApp Image 2024 10 13 at 20.53.55 3a43149e WhatsApp Image 2024 10 13 at 20.53.55 da35b7ef

இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒதுக்கிவிட முடியாது என்ற தமிழீழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக லுட்சேர்ன், ஒப்வாள்டன், நிட்வாள்டன் மற்றும் ஊரி மாநிலங்கள் வாழ் தமிழ்மக்கள், இன உணர்வாளர்கள், முன்னாள் போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் , ஆலய நிர்வாகம் மற்றும் தமிழ் மன்றம் என அனைவரும்  குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நடைபெற்ற இச் சந்திப்புக்கு நீண்ட காலதிற்க்கு பின்னர் பலர் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்து மட்டுமல்லாமல் ,சுவிஸில் தேசியத்தின் பெயரில் நடமாடும் போலிக் கும்பல்களுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button