Swiss News In Tamil

சூரிச்சில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

சூரிச்சில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியில்லாத பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் Zurich Palestine Committee எனும் குழு Instagram-இல் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆரம்பத்தில் Zurich மைய இரயில் நிலையத்தில் அமைதியாக இருந்த சூழ்நிலை, மாலை 7.30க்குப் பிறகு Stadtkreis 4, பின்னர் Lochergut மற்றும் Helvetiaplatz பகுதிகளில் கூட்டம் திரண்டு நகரத்தின் வழியே Stauffacher திசையில் சென்றபோது பதற்றமாகியது.

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்

போராட்டத்தின் போது, பொலிசாரும், ஆர்ப்பாட்டக்காரர்களும் நேரடியாக மோதிக்கொண்டனர்.

பொலிசார் கண்ணீர் வாயு, தண்ணீர் பீரங்கி மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். அதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் குப்பை தொட்டிகளை எரித்ததோடு, வெடிபொருட்கள் பயன்படுத்தினர் என்றும், கற்களை வீசி எறிந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Zurich மாநகர மற்றும் மாநில போலீசார் இணைந்து நடவடிக்கை எடுத்தனர். போராட்டம் இரவு 9.30 மணிக்கு முற்றுப்பெற்றது என தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button