Swiss News In Tamil

போலந்து மீதான தாக்குதல் குறித்து சுவிஸ் கரிசனை

போலந்து மீது, ரஸ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி இக்னோசியோ காஸீஸ் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

போலந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ரஸ்யா, உக்ரைனின் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

போலந்து மீதான தாக்குதல் குறித்து சுவிஸ் கரிசனை
போலந்து மீதான தாக்குதல் குறித்து சுவிஸ் கரிசனை

உக்ரைன் மீதான தாக்குதல்களின் போது அண்டை நாடான போலந்து மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக இடம்பெற்றதாக என்பது குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சுவிற்சர்லாந்தின் அழகை வாரம் ஒரு முறை ரசிக்கலாம் வாங்க..!

போலந்து, உக்ரைன் விவகாரங்கள் குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

 

Source:- TamilSwiss

Related Articles

Back to top button