Swiss News In Tamil

graubünden மாநிலத்தில் குடிபோதையில் விபத்து- ஓட்டுநர் உரிமம் பறிமுதல்.!!

graubünden மாநிலத்தில் குடிபோதையில் விபத்து- ஓட்டுநர் உரிமம் பறிமுதல்.!!

கிராவுன்டன் மாநிலத்தின் குடிபோதையில் வாகனம் ஓட்டி வீதியை சேதப்படுத்தியவரின் உரிமம் போலீசாரினால் உடனடியாக பறிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- கிராவுன்டன் மாநிலம் லாங்குவாட் ( Landquart GR) என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

34 வயதான ஒரு நபரே இவ்வாறு காரை ஓட்டிச்சென்று வீதியின் வீதிச்சமிஞ்சை விளக்கு இருந்த கம்பத்தில் மோதி பின்னர் அருகில் இருந்த இரும்பு வேலியில் முட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

graubünden மாநிலத்தில் குடிபோதையில் விபத்து- ஓட்டுநர் உரிமம் பறிமுதல்.!!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறித்த ஓட்டுனரிடம் ஆல்ககால் பரிசோதனை மேற்கொண்டதில் குடிபோதையில் வானத்தை ஓட்டிச்சென்றமை தெரியவந்துள்ளது.

எனவே உடனடியாக ஓட்டுனரின் உரிமத்தை அந்த இடத்திலையோ போலீசார் பறித்து சேதமான அவரின் கார் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற உள்ளுர் செய்திகளையும் முக்கிய சுவிற்சர்லாந்தின் செய்திகளையும் தினமும் அறிந்து கொள்ள எமது இணையத்தளத்தை பார்வையிடவும். நன்றி.

Related Articles

Back to top button