Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த கிராமம் எது தெரியுமா..?
சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த கிராமங்களின் தரவரிசைப்பட்டியல் கணக்கெடுப்பில் பாசல் கன்டோனில் உள்ள கிராமம் ஒன்று முதலிடம் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் பிரமிக்க வைக்கும் கிராமங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கிராமங்களும் அங்குள்ள வரலாற்று மற்றும் கட்டடக்கலை அடையாளங்கள் மற்றும் பழமையான இயற்கையால் முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்நிலையில் ‘மிக அழகான கிராமத்தை சுவிட்சர்லாந்தில் தேர்ந்தெடுப்பது என்பது எளிதான காரியம் அல்ல.
அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் மிகச்சிறந்த கிராமமாக பாசல் கன்டோனிலுள்ள ஆர்லெஷெய்ம் கிராமம் இடம்பிடித்துள்ளது.

பாசல் நகரின் மையத்திலிருந்து 20 நிமிட டிராம் பயணத்தில் குறித்த கிராமத்தை அடையமுடியும். இது ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்தில் ‘சிறந்த கிராமமாக’ முடிசூட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.





