Swiss News In Tamil

சூரிச் கன்டோனில் விபத்து: 22 வயது இளைஞர் உயிரிழப்பு

சூரிச் கன்டோனில் விபத்து: 22 வயது இளைஞர் உயிரிழப்பு

சனிக்கிழமை பிற்பகலில் சூரிச் கன்டோனில் உள்ள டேட்லிகான் பகுதியில் ஏற்பட்ட கடுமையான சாலை விபத்தில் 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணை தகவல்களின்படி, வலது பக்க வளைவில் சென்றுகொண்டிருந்த போது காரணம் தெரியாத நிலையில் இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது மோட்டார் சைக்கிள் வழுக்கி எதிர்புற பாதையில் சென்ற போது, எதிர்திசையிலிருந்து வந்த காருடன் நேருக்கு நேர் மோதி உள்ளது.

மோதல் மிக கடுமையாக இருந்ததால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன. சம்பவ இடத்திற்குத் துரிதமாக வந்த மீட்பு குழுவினர் முயன்ற போதிலும், அவர் அங்கேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காரை ஓட்டிய நபருக்கு உடல் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், மனஅழுத்தம் காரணமாக உளவியல் உதவி வழங்கப்பட்டது.

N2 4

விபத்து காரணமாக மீட்பு பணிகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் நடைபெற, டேல்லிகான் மற்றும் ப்ளூமெட்ஸ்ஹால்டே இடையிலான சாலை பல மணி நேரங்கள் மூடப்பட்டது. தீயணைப்பு படையினர் மாற்றுப் பாதையை ஏற்பாடு செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இந்த விபத்தின் முழுமையான காரணம் குறித்து சூரிச் கன்டோன் காவல்துறையின் நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்தில் சமீப காலமாக இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

© Kapo ZH

 

Related Articles

Back to top button