சுவிட்சர்லாந்தில் தொடரும் பெற்றோல் விலை அதிகரிப்பு.!!
சுவிட்சர்லாந்தில் பெட்ரோலின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை இரண்டு சுவிஸ் பிராண்டுகளை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரத்திலும் சுமார் மூன்று சதங்கள் அளவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோடைகால ஆரம்பம் முதலே சுவிட்சர்லாந்தில் எரிபொருட்களுக்கான விலை உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஒன்று தசம் ஒன்பது சுவிஸ் பிராங்குகள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் பிராந்தியத்திற்கு பிராந்தியம் பெட்ரோலின் விலையில் மாற்றம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் பிராங்குக்கு நிகரான அமெரிக்க டாலரின் பெறுமதி அதிகரிப்பு சர்வதேச சந்தையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தியை வரையறுத்து உள்ளமையும் இவ்வாறு விலை ஏற்றத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.





