ஆர்காவ் நெடுஞ்சாலை A1 சுரங்கத்தில் பயங்கர விபத்து : பற்றியெரிந்த கார்கள்
ஆர்காவ் நெடுஞ்சாலை A1 சுரங்கத்தில் பயங்கர விபத்து : பற்றியெரிந்த கார்கள்
2025 ஜூன் 20 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 07:35 மணியளவில், சூரிச்சை நோக்கி செல்லும் A1 நெடுஞ்சாலையில், Neuenhof பகுதியிலுள்ள சுரங்கப்பகுதியில் பெரிய விபத்து ஒன்று நிகழ்ந்தது.
சாலை மீது ஓர் வாகனம் திடீரென தடைபட்ட நிலையில் மிகவும் மெல்ல பயணித்தது. இதனால் பின் தொடரும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடிக்கடி மோதியதால், பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஓர் கட்டுக்கடங்கா மோதல் உருவானது.
மோதலில் ஈடுபட்ட ஒரு வாகனம், பின்னர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அருகிலிருந்த மற்ற மூன்று வாகனங்களுக்கும் தீ பரவியது. வாகனங்கள் அருகருகே இருந்ததால் தீ வேகமாக பரவியது.

இதில் நான்கு வாகனங்கள் தீக்கிரையாகின. நால்வர் சிறிய அளவில் காயம் அடைந்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீப்பற்றியதால் அதிக புகை வெளியீடு ஏற்பட்டது. விபத்து காரணமாக A1 நெடுஞ்சாலை இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை முழுமையாக முடக்கப்பட்டது
மீட்பு பணிகளில் Baden தீயணைப்பு படை, Ambulanz சேவைகள், Nationalstrassen Nordwestschweiz இன் நிபுணர்கள், மற்றும் அர்காவ் கன்டோன் போலீசாரும், Baden நகர போலீசும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணங்களை கண்டறிவதற்காக அர்காவ் கன்டோன் போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். தீ எப்போது, எதனால் ஏற்பட்டு பரவியது என்பது தற்போது வரை தெளிவாகவில்லை.
இந்த வகை விபத்துகள் மிக ஆபத்தானவை. நெடுஞ்சாலையில் வாகன தடைகள் அல்லது மின்சார கோளாறுகள் ஏற்பட்டால், உடனே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி, அவசர சேவைகளை தொடர்புகொள்ள வேண்டும். இந்த செய்தி மூலமாக, வாகன ஓட்டிகள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
@Kapo AG





