Swiss News In Tamil

அதிர்ச்சி தகவல் : தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம்

அதிர்ச்சி தகவல் : தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம்

சுவிஸ் விண்வெளி தொலைநோக்கியான CHEOPS இன் உதவியுடன் புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் அறிவியலாளர்கள். ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான ESA வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, HIP 67522 b என்ற ஒரு வித்தியாசமான கிரகத்தைக் குறித்த ஆராய்ச்சி உலக விஞ்ஞானிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கிரகம், அடுத்த 10 கோடி ஆண்டுகளில், தற்போது இருக்கும் ஜூபிட்டரின் அளவிலிருந்து நெப்டியூனின் அளவுக்குத் தன்னைக் குறைத்துக் கொள்ளும் அபாயத்தில் இருக்கிறது.

இது “தற்கொலை செய்கிற கிரகம்” என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். அதற்குக் காரணம் என்னவென்றால், அந்த கிரகம் மிக வலிமையான சூரிய ஆற்றலை அல்லது எரிப்புகளை (Solar flares) வெளியிடுகிறது.

அதிர்ச்சி தகவல்

விடயம் என்னவென்றால், அந்த சூரிய ஆற்றல் மிகவும் வலிமையாக இருப்பதால், அந்த ஆற்றல், அந்த கிரகத்தின் வளிமண்டலத்தையே தாக்கி, அந்த கிரகத்தையே சுருங்கச் செய்கிறது. தற்போது ஜூபிடர் கிரகத்தின் அளவில் காணப்படும் இந்த கிரகம், அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் நெப்டியூன் கிரகம் அளவுக்கு சுருங்கிவிடலாம் என கருதப்படுகிறது.

ஆகவேதான், அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் கிரகம் என விமர்சிக்கப்படுகிறது. இப்படி தன்னைத்தான் அழித்துக்கொள்ளும் ஒரு கிரகம் ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button