Swiss News In Tamil

Rapperswil – Jona வில் இடம்பெற்ற இரவுநேர ஏரித்திருவிழா

Rapperswil - Jona வில் இடம்பெற்ற இரவுநேர ஏரித்திருவிழா

Rapperswil – Jona வில் இடம்பெற்ற இரவுநேர ஏரித்திருவிழா.!! சென்ட்காலன் கன்டோன் ரப்பேர்ஸ்வில் Jona பகுதியில் வெகுவிமர்சியாக நேற்று இரவு இடம்பெற்றது.

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெறும் இந்த திருவிழாவில் வானவேடிக்கை நிகழ்வுகள் உட்பட பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றது. 100 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இம்முறை இந்த ஏரி இரவு திருவிழாவிற்கு முதல் நாளே ராப்பர்ஸ்வில்லில் கூட்டம் அலைமோதியது.

சனிக்கிழமை இரவு விழா சரியான நேரத்தில் தொடங்கியது . ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான விருந்தினர்கள் பழைய நகரம் வழியாக ஏரிக்கரைக்கு உலா வந்தனர்.

Rapperswil

ஆரம்ப நிகழ்வாக ‘சுவிஸ் பாராவிங்ஸ்’ ஸ்கைடைவர்ஸ்சின் வான சாகசங்களுடன் ஆரம்பமாகியது. அவர்கள் வானத்திலிருந்து மிதந்து ராப்பர்ஸ்வில் துறைமுகப் படுகையில் துல்லியமாக இறங்கினார்கள்.

பின்னர் இசை நிகழ்ச்சிகளும் இரவு 10 மணி அளவில் வானவேடிக்கையும் இடம்பெற்றது. அலைமோதிய மக்களோடு நகரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு வானவேடிக்கை வெளிச்சத்தை கொடுத்தது பார்ப்பவர்களுக்கு கண்கொள்ளாக்காட்சியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button