சூரிச் Sechseläutenplatz பகுதியில் இரவு துப்பாக்கிச் சத்தம் – வெற்றுக் குண்டுகள் கண்டுபிடிப்பு
சூரிச் Sechseläutenplatz பகுதியில் இரவு துப்பாக்கிச் சத்தம் – வெற்றுக் குண்டுகள் கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) நகர மையத்தில் உள்ள Sechseläutenplatz பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட துப்பாக்கிச் சத்தம் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இரவு 23:30 மணிக்குப் பின்னர் பலர் சுடும் சத்தம் கேட்டதாக தகவல் வழங்கியதையடுத்து, Kantonspolizei Zürich உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது.
அங்கு மேற்கொண்ட விசாரணையில், உண்மையான துப்பாக்கி அல்லாமல் வெற்றுக் குண்டுகள் பயன்படுத்தப்படும் pistol மூலம் சுடப்பட்ட தோட்டாக்கள் (cartridges) கிடைத்தன. இதனால் யாருக்கும் நேரடி ஆபத்து ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

சாட்சிகளின் தகவலின்படி, சம்பவத்தின் போது இளைஞர்கள் குழுவொன்று Stadelhofen நோக்கி ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு உடனடி அபாயம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சம்பவத்தின் பின்னணி மற்றும் இதில் ஈடுபட்டவர்களை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





