Swiss News In Tamil
சுவிஸ் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை; அதிர்ச்சி தகவல்

சுவிஸ் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை; அதிர்ச்சி தகவல்
சுவிட்சர்லாந்து பணியாளர்கள் அதிகளவில் உளவியல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் உளச் சுகாதார பிரச்சினைகளினால் பணியிலிருந்து விலகுதல் அல்லது விடுப்பு எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் உளச் சுகாதாரப் பிரச்சினை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகும் பணியாளர்கள் சராசரியாக பதினொரு மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உளவியல் பிரச்சினைகளினால் பணியாளர்கள் பாதிக்கப்படுவதனால் வருடாந்தம் சுமார் 20 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் என்ற பெறுமதியில் பொருளாதாரத்திற்கு தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





