Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் 6,400 பயிற்சிப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்

சுவிட்சர்லாந்தில் பயிற்சி வேலை வாய்ப்புகள் குறைந்தாலும் – கட்டிடம், உணவகம், இயந்திரத் துறை இன்னும் சவாலில்

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் பயிற்சி வேலை வாய்ப்புகள் (Apprenticeship) குறைந்துள்ளன. இருந்தாலும் கட்டிடத் துறை, உணவகத் துறை, இயந்திரத் தொழில் போன்ற பிரிவுகள் இன்னும் இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

2025 ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில், நாட்டில் சுமார் 6,400 பயிற்சி வேலை இடங்கள் காலியாக இருந்தன. இது கடந்த ஆண்டு இருந்த 8,500 காலியிடங்களைவிட குறைவாகும்.

சமூக ஊடகங்களின் தாக்கம்.

இந்தத் தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை Yousty என்ற தளம் வெளியிட்டது. நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆட்சேர்ப்பில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய பிரச்சாரங்கள் மூலம் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளன. Yousty நிறுவன பேச்சாளர் லாலே சிரோகோ (Lale Scirocco) இது பற்றி குறிப்பிடுகையில், இளைஞர்களின் பயிற்சி வேலைக்கான ஆர்வம் உயர்ந்துள்ளது. 6,400 காலியிடங்களில் சுமார் 1,800 கட்டிடம் துறை, 600 உணவகத் துறை, மற்றொரு 600 தொழில் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை அடங்கும் எனவும் தெரிவித்தார்.

There are 6400 vacant training positions in Switzerland

சமையலர்களின் பற்றாக்குறை.

இருப்பினும், வேலை வாய்ப்புகள் குறைந்து பிரச்சனை தீர்ந்துவிட்டது என்பதல்ல என சிரோகோ எச்சரித்தார். காரணம், பல நிபுணர்கள் விரைவில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். சில தொழில்கள் கடுமையான நிலையை சந்திக்கின்றன.

சமையலர் பயிற்சி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் 14% குறைந்துள்ளனர். சாலை கட்டுமானத் துறையில் இளைஞர்கள் 4% குறைந்துள்ளனர்.  பொதுவாக கைவேலை சார்ந்த தொழில்கள், டிஜிட்டல் உலகில் வளர்ந்து வரும் இளைஞர்களை ஈர்க்க கடுமையாக போராடுகின்றன. சமையலர் போன்ற தொழில்கள் உண்மையான ஆர்வமும் உறுதியும் தேவைப்படும் காரணத்தால், பெரும்பாலான இளைஞர்கள் இதை “இரண்டாம் தேர்வு” ஆக கருதுவதில்லை.

60% இளைஞர்கள் பயிற்சியைத் தேர்வு செய்கிறார்கள்.

2025 மே மாத இறுதிக்குள், 54,500 இளைஞர்கள் பயிற்சி வேலை ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 1,300 அதிகரிப்பாகும் என கூட்டாட்சி (Confederazione) தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 60% இளைஞர்கள் பயிற்சி வேலைக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

  • வணிக நிர்வாகம் (Commerce Employees)
  • சுகாதாரம்
  • தகவல் தொழில்நுட்பம் (Informatics)
  • சில்லறை வணிகம் (Retail Trade)

என்பன தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பிரிவுகளாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button