Swiss News In Tamil

ஜேர்மனியில் தொடரும் பொதுப்போக்குவரத்து போராட்டம் : சுவிஸ் பயணிகள் பாதிப்பு

ஜேர்மனியில் தொடரும் பொதுப்போக்குவரத்து போராட்டம் : சுவிஸ் பயணிகள் பாதிப்பு ஜேர்மன் போக்குவரத்து வேலைநிறுத்தங்கள் இன்னும் தொடர்ந்தவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இடம்பெறும் வேலைநிறுத்தங்களால் இந்த வாரம் ஒரே நேரத்தில் தொழில்துறை நடவடிக்கைகளில் ரயில் மற்றும் விமானப் பயணங்கள் பாதிக்கப்படும் என்பதால் பயணிகளுக்கு இன்னும் அதிகமான இடையூறுகள் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றும் நாளை புதன்கிழமையும் சுவிட்சர்லாந்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் ரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியில்

‘வேலைநிறுத்தம் காரணமாக, ஜெர்மனியில் ரயில் போக்குவரத்து குறைவாக உள்ளது’ என்று சுவிஸ் தேசிய ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் மேலதிக தகவல்களை அறிய விரும்பினால் சுவிஸ் தேசிய ரயில் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அறிவுறுத்தல்களை பின்பற்றமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button