Swiss News In Tamil

வெள்ள அபாய எச்சரிக்கை : தொடர் மழையால் ஆபத்து நிலை உயர்வு

வெள்ள அபாய எச்சரிக்கை : தொடர் மழையால் ஆபத்து நிலை உயர்வு

சுவிட்சர்லாந்தின் இன்னர்ஸ்சுவிஸ் பகுதியில், தொடர்ச்சியான கனமழை காரணமாக, சில இடங்களில் வெள்ள அபாய நிலை 3 இலிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.

நதிகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாகவும் கடுமையாகவும் உயரும், வெள்ளப்பெருக்கு, மற்றும் செங்குத்தான மலைகளில் இருந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் குறித்து கூட்டாட்சி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 27, பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு வரை இந்த மழையின் தீவிரம் உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 120 முதல் 170 மில்லி லிட்டர் வரை மழை பெய்யக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Stufe 4 Bund warnt vor grosser Unwetter Gefahr

பொதுமக்கள் நதி மற்றும் ஏரிக் கரைகளையும், செங்குத்தான மலைப்பகுதிகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கூட்டாட்சி சுற்றுச்சூழல் அலுவலகம் (BAFU) வெளியிடும் வெள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்றுவது முக்கியம். மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அங்கு திடீர் மண்-நீர் வெள்ளம்  ஏற்பட வாய்ப்புள்ளது.

இத்தகைய மண்-நீர் வெள்ளம் எச்சரிக்கையின்றி திடீரென ஏற்பட்டு, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது என கூட்டாட்சி அரசு எச்சரித்துள்ளது.

Related Articles

Back to top button