Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் குளிரூட்டப்பட்ட ரயில்களா.? வெளியான தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் குளிரூட்டப்பட்ட ரயில்களா.? வெளியான தகவல்.!!

சுவிட்சர்லாந்தில் கடும் வெப்பத்துடன் கோடை நாட்கள் தொடர்ந்துள்ள நிலையில், பெரும்பாலான பயணிகள் குளிரூட்டிய ரயில்களில் பயணிக்க விரும்புவது இயற்கை. இங்கு நல்ல செய்தி என்னவென்றால், சுவிஸ் தேசிய ரயில் நிறுவனம் SBB வெளியிட்ட தகவலின்படி, 98 சதவிகித சுவிஸ் ரயில்கள் குளிரூட்டும் (A/C) வசதியுடன் இயங்கி வருகின்றன.

ஆனால், இந்த குளிரூட்டும் அமைப்புகள் அனைத்தும் எப்போதும் சிறப்பாக இயங்கும் என உத்தரவாதமில்லை. SBB தெரிவித்தபடி, சுமார் 9,100 குளிரூட்டும் இயந்திரங்களில் தினசரி சுமார் 20 இயந்திரங்கள் செயலிழக்கலாம்.

ரயில்களில் உள்ள குளிரூட்டும் நிலையை பாதிக்கும் காரணங்களில், வெளிப்புற வெப்பநிலை, பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ரயிலின் வேகம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

SBB1

எப்படியிருந்தாலும், ரயிலில் எளிதில் “ஐஸ் box” மாதிரியான குளிர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். மிகவும் சூடான நாட்களிலும், ரயிலின் உள்ளே உள்ள காற்று வெப்பநிலை வெளியே இருக்கும் வெப்பத்தைவிட சுமார் 8 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, வெளியே 30°C இருந்தால், ரயிலில் உள்ளே சுமார் 22°C இருக்கும்.

இதனால், சுவிஸ் ரயில்களில் பயணம் செய்யும் போது பெரும்பாலும் நிம்மதியான குளிர்ச்சியை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button