Swiss News In Tamil

சூரிச் ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத வாலிபர் மீது தாக்குதல்

சூரிச் ஜெப ஆலயத்திற்கு அருகில் யூத வாலிபர் மீது தாக்குதல்.!!

வியாழன் காலை, சூரிச் Wiedikon (வீடிகோனில்) உள்ள ஜெப ஆலயத்திற்கு அருகில் 14 வயது யூத சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டான். இந்த தாக்குதலில் வாலிபர் லேசான காயம் அடைந்தார்.

சூரிச் நகர போலீஸார் உடனடியாகத் தலையிட்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்தனர். சந்தேக நபரான 25 வயதுடைய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நபர் ஆயுதம் ஒன்றை வைத்திருந்தார். பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் மனநலப் பிரச்சினைகளின் அறிகுறிகளைக் காட்டுகிறார்.

யூத வாலிபர்

அதே நபர் தான் அப்பகுதியில் நடந்த மற்ற சம்பவங்களுக்கு பொறுப்பாக இருக்க முடியுமா என்பது குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களில், சூரிச்சின் மாவட்டம் 3 இல் யூத நபர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பல அறிக்கைகள் மற்றும் புகார்கள் வந்துள்ளன.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர் மேலதிக பரிசோதனைக்காக வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். (c) watson

Related Articles

Back to top button