Swiss News In Tamil

இத்தாலி செல்லும் புதிய ரயில்கள் சுவிட்சர்லாந்தில் சேவையில்

இத்தாலி செல்லும் புதிய ரயில்கள் சுவிட்சர்லாந்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும்

இத்தாலி செல்லும் புதிய ரயில்கள் சுவிட்சர்லாந்தில் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி இடையே புதிய நேரடி ரயில் இணைப்புகள் 2026 முதல் தொடங்கும் என்று சுவிஸ் ஃபெடரல் ரயில்வே (SBB) மற்றும் இத்தாலிய ரயில்வே Trenitalia (ட்ரெனிடாலியா) அறிவித்துள்ளன.

இந்த புதிய ரயில்கள் சூரிச்சிலிருந்து நேரடியாக Florence (புளோரன்ஸ்) மற்றும்  Livorno (லிவோர்னோ)  போன்ற இடங்களுக்கு புதிய நேரடி இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தன.

இத்தாலி New Italy bound trains will be put into service in Switzerland

சூரிச், மிலன் மற்றும் வெனிஸ் இடையே ஒரு புதிய சேவையும் இடம்பெறும். இந்த இலக்கை நிறைவேற்ற, SBB நான்கு புதிய அதிவேக ‘Giruno’ அதிவேக ரயில்களை ஆர்டர் செய்துள்ளது.

இந்த ரயில்கள் வடக்கு-தெற்கு அச்சில் இயங்குகின்றன மற்றும் சுவிட்சர்லாந்து-இத்தாலி இணைப்புகளில் ஒரு முக்கிய பகுதியாகும்.

புதிய ரயில்கள் தற்போதுள்ள 29 ரயில்கள் மற்றும் 2022 இல் ஆர்டர் செய்யப்பட்ட ஏழு ரயில்களுடன் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button