Swiss News In Tamil

சுவிஸ்தமிழ் ஊடக மையத்தின் உறுப்பினர்கள் சந்திப்பு

சுவிஸ்தமிழ் ஊடக மையத்தின் உறுப்பினர்கள் சந்திப்பு

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஊடகவியளாளர்கள் ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை கன்டோன் ஊரியில் இடம்பெற்றது.

ஊரியில் அமைந்துள்ள ‘தமிழ்உணகத்தில்’ குறித்த சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.

சுவிஸ்தமிழ் ஊடக நிர்வாக குழுவினர் உட்பட முன்னாள் ஊடகவியளார்கள் பலர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். சுவிஸ்தமிழ் ஊடக மையத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2024 11 03 at 17.06.59 cdd086a5 WhatsApp Image 2024 11 03 at 17.07.07 8e41bc6c சுவிஸ்தமிழ்

சுவிட்சர்லாந்தில் உள்ள 2ம் தலைமுறையினருக்கு ஊடகத்தின் மீதான ஆர்வத்தினை தூண்டும் வகையில் கருத்தரங்குகள் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டது. மேலும் சந்திப்பில் கலந்துகொண்ட முன்ளைநாள் ஊடகவியளார்கள் தங்களது கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களை இணைந்து எதிர்காலத்தில் இளம் சமுதாயத்தினர் மத்தியில் ஒரு சிறந்த ஊடககட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை தற்போது உள்ளதாகவும் மூத்த ஊடகவியளார்களால் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button