சொலுத்தூர்ன் மாகாணத்தில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்
சொலுத்தூர்ன் மாகாணத்தில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்
சொலுத்தூர்ன் மாகாணத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் காயமடைந்து ரேகா மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
( Kestenholz)கெஸ்டன்ஹோல்ஸில் இருந்து வந்த சிவப்பு நிற கார் ஒன்று (Oensingen) ஓன்சிங்கனில் இருந்து வந்த வெள்ளை நிற வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சிவப்பு காரில் இருந்த இருவர், டிரைவர் மற்றும் அவரது குழந்தை பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளை வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தவும், வாகனங்களை அகற்றவும் பல மணி நேரம் சாலை மூடப்பட்டது. இந்த விபத்து காலை 10:15 மணிக்கு முன்பு நடந்துள்ளது, நேருக்கு நேர் மோதியதற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்படுகிறது.
விபத்தின் வேகத்தால் சிவப்பு நிற கார் சுழன்று, இரண்டு வாகனங்களும் சாலையை ஒட்டிய புல்வெளியில் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(c) Nau.ch / Nico Leuthold





